"கசிந்தது நன்மைக்கே" - பிரபல இயக்குனர் பேச்சால் அதிர்ச்சி!
|
விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அரசியலில் குதித்திருக்கும் விஜய் தனது கடைசி படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி செய்கிறார்கள் என வெளிப்படையாகவே இது பற்றி காட்டமாக முன்பு பேசி இருந்தார். |
|
இந்நிலையில் நேற்று ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் லீக் ஆகிவிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு ரஜினி கமல் தொடங்கி சூர்யா, சிவகார்த்திகேயன் வரை எல்லோரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் ட்விட்டரில் போட்டிருக்கும் பதிவை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். "ஒரு வகையில் கசிந்தது நன்மைக்கே" என விஜய் மில்டன் பதிவிட்டு இருக்கும் நிலையில், அவரது பேச்சு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். |