நீண்ட இடைவெளிக்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கெளதமி

10.11.2022 08:09:33

நீண்ட இடைவெளிக்கு பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக நடிகை கவுதமி தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

ரஜினிகாந்த், பிரபு நடித்த ’குருசிஷ்யன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கௌதமி. அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த், உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பதும் 90களில் பிரபலமான நாயகியாக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட கௌதமி பாஜகவில் இணைந்து தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படத்தில் நடித்த கௌதமி அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தற்போது பாலிவுட்டில் தயாராகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெறும் வெப்சீரிஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறியுள்ள கெளதமி, அதுகுறித்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.