உயிருடன் உள்ளார் அல் - குவைதா தலைவர்

13.09.2021 09:23:00

அமெரிக்க படையால், அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின், அய்மான் அல் ஜவாஹிரி தலைமை பொறுப்பை ஏற்றார்.

உடல் நலக்குறைவால் சில ஆண்டு களுக்கு முன் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது.இந்நிலையில், பயங்கரவாத குழுக்களின் இணையதளங்களை கண்காணிக்கும் எஸ்.ஐ.டி.இ., என்ற புலனாய்வு அமைப்பு ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அய்மான் அல் ஜவாஹிரி பேசுவது போல் அதில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.அதில், ஜெருசலேம் யூதமயமாகும் என்பது நடக்காது எனக் கூறியுள்ள ஜவாஹிரி, ரஷ்ய படைகள் மீது அல் - குவைதா நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.

ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது பற்றியும் பேசியுள்ளார். ஆனால், தலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியது குறித்து அதில் அவர் எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகமும், கேள்வியும் எழுப்பி உள்ளனர்.