டுவிட்டரில் எலான் மஸ்க் செய்துள்ள அதிரடி மாற்றம்!

04.04.2023 20:48:10

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து அதில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.

இந்தநிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக நீல நிறத்தில் குருவி ஒன்று இருந்து வந்தநிலையில், தற்போது அது நாய் படமாக மாற்றப்பட்டுள்ளது.

டுவிட்டரில் நீண்ட கால வழக்கத்தில் இருக்கும் நீல நிற குருவி வடிவ லோகோவே தற்போது மாற்றப்பட்டுள்ளது.

 

மாற்றம்

ஜப்பானில் உள்ள முக்கிய நாய் இனமான ‛ஷிபு இனு' என்ற நாயே டுவிட்டரின் புதிய லோகோவில் இடம்பெற்றுள்ளது.

டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் குறித்த பல மாற்றங்கள் குறித்து டுவிட்டர் பயனர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நாய் லோகோ மாற்றம் தற்போதைக்கு கணினி பயன்பாட்டில் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.