திருவண்ணாமலை மண் சரிவு!

03.12.2024 07:00:00

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியான குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்தது. தொடர்ந்து இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் தீவிரமாக நடந்த நிலையில் வீட்டில் சிக்கிய 7 பேரை சடலமாகவே மீட்க முடிந்தது.

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துரிதமாக மீட்பு பணிகள் மேற்கொண்டபோதும் உயிருடன் அவர்களை மீட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.