தடுப்பு மருந்து 80 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது !

14.02.2021 10:12:07

80 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய மிகப்பெரிய கொரோனா 9 தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் ஒரு மாதமாக நடைபெறுகின்றது.

சுகாதாரம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நேற்று மாலை 6 மணி வரை 80 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டு இருக்கின்றது.

தடுப்பு மருந்து வழங்கலின் இரண்டாவது கட்டம் நேற்று தொடங்கியது. முதல் கட்டத்தில் தடுப்பு மருந்து பெற்று 28 நாட்கள் நிறைவு செய்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.