
கை கொடுக்குமா மதராஸி?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி.
இந்தப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்தின் கூலி வெளியானதன் பின்னர் மதராஸி பட புரமோஷன்களை ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். காரணம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரிய வெற்றி பெற்றது.
350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அந்தப்படம் அள்ளியது.
ஆகவே, இன்னொரு வெற்றிக்கொடுத்து அவர் தன்னை நிரூபிக்க ஆசைப்படுகிறார்.
முருகதாஸிற்கு பெரிய வெற்றி ஒன்று தேவைப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கானை வைத்து இறுதியாக அவர் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி அடைந்தது.
மொத்தமே 160 கோடி ரூபாய் வரையிலேயே வசூலித்ததாக தகவல்.
ஆகவே, அவரின் அடுத்த படம் அவர் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது.
இந்தநிலையில் இரண்டு பேருமே மதராஸியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
கஜினி, துப்பாக்கி கலந்த கலவை என மதராஸி பற்றி முருகதாஸ் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.