
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது!
காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு மெகசின்கள், இரண்டு கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை ஆயுதப்படைகள் தீவிரப்படுத்திய நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் ஒரு அறிக்கையில் பொலிஸார், இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான இர்பான் பஷீர் மற்றும் உசைர் சலாம் ஆகியோர் சரணடைந்ததாகவும், அதனால் ஒரு மோதல் தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர், தெற்கு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையத்தைத் திருப்பியபோது இந்த நடவடிக்கை வந்தது.