
யாழ். மாவட்டத்திலவ் 362 வேட்பாளர்களே கணக்கு காட்டினர்!
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 396 வேட்பாளர்களில் 362 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். |
கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்து 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இரண்டிலுமாகச் சேர்த்து 396 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இந்த தேர்தல் முடிவடைந்த பின்னர் வேட்பாளர்கள் தமது கணக்கறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்பது இம்முறை கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு வரை அதற்காக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 396 வேட்பாளர்களில் 362 வேட்பாளர்கள் தமது தேர்தல் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். |