ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றல்

19.09.2021 04:22:53

ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகனசாரதியை காவற்துறை விசேட அதிரடி படையினர் கைது செய்து , அச்சுவேலி காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்வதாக காவற்துறை விசேட அதிரடி படையினருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் (ரோந்து) ஈடுபட்டிருந்தனர். 

அதன் போது சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த கன்ரர் ரக வாகனத்தை மடக்கி பிடித்து சாரதியை கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட சாரதியையும் , கைப்பற்றப்பட்ட கன்ரர் வாகனத்தையும் அச்சுவேலி காவல் நிலையத்தில் காவற்துறை விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.