யாழ் சங்கரத்தை பகுதியில் நிழல் தரும் மரங்கள் நாட்டி வைப்பு

21.10.2021 08:04:45

அமெரிக்கா வாழ் தமிழ் உறவுகளின் நிதிப் பங்களிப்பில், சங்கரத்தை கரந்தைக் குளத்தை சுற்றி, யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மூன்றாம் கட்டமாக நன்கு வளர்ந்த மருது, புங்கை, வாகை, சுந்தரவேம்பு போன்ற 20 மரங்கள் நாட்டப்பட்டது.

இதில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சங்கரத்தை ஐயா மற்றும் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து தந்த சங்கரத்தை இளையவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.