யாழில் சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

11.08.2023 09:44:33

யாழ்பாணம் வண்ணார் பண்ணை பகுதியில் சிசுவின் சிதைவடைந்த  உடற்பாகம் இன்று மாலை  மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலவர்களால் குறித்த உடற்பாகம் அடையாளம் காணப்பட்டு  பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்துள்ள நிலையில், சட்ட வைத்தியதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து  ஆராய்ந்தார்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் சுடலைப் பகுதியில் இருந்து சடலம் விலங்குகளால் இழுத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.