நினைவேந்தல்களைத் தடுப்பது சமாதானத்தைச் சீர்குலைக்கும்

14.05.2024 08:12:37

தமது உறவுகளை நினைவேந்தும் நிலைமைகளில் நிதானத்தோடும் தார்மீகத்தோடும் அணுகும்படி பொலிஸாருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட வேண்டுமென என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்இ தமது உறவுகளை நினைவேந்தும் எமது மக்களின் உரிமையை அடக்குமுறைச் சட்டங்களை ஏவி மறுப்பது நாட்டில் அமைதிஇ சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைத்து விடும் எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விடயத்தை நிதானத்தோடும்இ நீதி – நியாயத்தோடும்இ தார்மீகத்தோடும் அணுகும்படி தனது பொலிஸ் கட்டமைப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுக்கமாகப் பணிப்புரை கொடுத்து வழிநடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதில் அவர் தவறுவாரேயானால் தமிழர்களிடம் அரசியல் பாடம் படித்த கசப்பான அனுபவம் போன்ற ஒரு பட்டறிவை திரும்பவும் அவர் பெற வேண்டிய துர்ப்பாக்கியம் நேர்ந்து விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related