பிரச்சினைகளைத் தீர்க்க நிபுணர் குழு

15.03.2024 07:46:41

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நிர்மாணத்துறையில் உள்ள கைத்தொழில்துறையினருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றின் செயலாளர்களை உள்ளடக்கி, துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த நிபுணர் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்