பெலியத்தை 5 பேர் சுட்டு கொலை சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

05.02.2024 07:06:20

பெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மாத்தறை , பெலியத்த பகுதியில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஐவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், குறித்த கொலை சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹபராதுவை பகுதியில் வைத்து மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.