காத்தான்குடி கொரோனா பிரிவு காவற்துறை பொறுப்பதிகாரிக்கு கொரோனா

15.08.2021 15:07:08

மட்டக்களப்பு காத்தான்குடி கொரோனா பிரிவு பொறுப்பதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சிகிச்சைக்காக கொரோனா வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை (14) அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

காவற்துறையினருக்கு சுகாதார துறையினரால் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகின்ற நிலையில் காத்தான்குடி காவல் நிலைய கொரோனா பிரிவு பொறுப்பதிகாரிக்கு எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து அவரை கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த பிரிவிலுள்ளவர்களை தனிமைப்படுத்தப்பட்டதுடன் தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.