விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைக்கும் இந்தியா!

09.02.2024 12:41:56

விண்வெளியில், ஆய்வு நிலையமொன்றை அமைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முழுமூச்சாக இறங்கியுள்ளது.

மேலும் இவ்வாறு அமைக்கப்படவுள்ள ஆய்வு மையமானது எதிர்வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் செயற்பாட்டுக்குள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையமொன்றை உருவாகியுள்ளன.

அத்துடன் சீனாவும் தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைத்துள்ள நிலையில் தற்போது இந்தியாவும் குறித்த பட்டியலில் முன்றாவதாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.