500 மாணவிகளுக்கு நடுவே பரீட்சை எழுதிய மாணவன் திடீர் மயக்கம்

03.02.2023 00:08:21

சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் பாடசாலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் ஷெரிப் பகுதியில் இயங்கி வரும் பாடசாலையில் மனிஷ் ஷங்கர் பிரசாத் எனும் மாணவர் பரீட்சை எழுத சென்றுள்ளார்.

திடீரென மயக்கம்

அன்று கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவரும் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவேளை திடீரென மயக்கம் அடைந்து கீழே விழவே பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் பதறி அடித்து அவரை எழுப்பி உள்ளார்.

இதனையடுத்து மனிஷ் அருகில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சில மணிநேரங்களில் மனிஷின் உடல்நிலை சீரானதாக அவனது தந்தை சச்சிதானந்த பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

 

 500 ற்கும் மேற்பட்ட மாணவிகள்

இந்நிலையில் மனிஷை கவனித்துக்கொள்ளும் அவருடைய அத்தை இதுபற்றி பேசுகையில்,"பரீட்சை நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். ஏராளமான பெண்கள் சூழ்ந்த பாடசாலையின் தேர்வு அறையில் மனிஷுக்கு பள்ளி நிர்வாகம் இருக்கை கொடுத்துள்ளது. மாணவிகள் சூழ்ந்திருந்ததால் தான் பதட்டமடைந்ததாகவும் அதனால் மயக்கம் வந்துவிட்டதாகவும் மனிஷ் கூறியிருக்கிறான்" என தெரிவித்திருக்கிறார்.