ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்!

10.04.2024 07:09:22

“ரஃபா மீது தாக்குதல் நடத்தப்படும்”என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது 6 மாதங்களைக் கடந்து நீடித்து வரும் நிலையிலேயே இஸ்ரேல் பிரதமர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகின்றது. ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போரின் இலக்கு நிறைவடையும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும் ரஃபாவில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் இருப்பதால் ரஃபா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும், அம்மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற  அமெரிக்கா வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.