பலாலி அம்மனை வழிபட இராணுவம் நேரக்கட்டுப்பாடு!

18.07.2025 15:45:58

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் நேற்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையினூடாக காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00மணி வரை செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.