கமலுக்கு வந்த சோதனை.

02.07.2024 00:45:22

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம்தான். லைகா புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகின்றது. படத்தில் கமல்ஹாசன் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. அமெரிக்காவில் இதுவரை படத்திற்கு சுமார் 2500 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் படம் இதுவரை ரூபாய் 54 லட்சம் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. Indian 2: கல்கியை ஓரம்கட்டுமா இந்தியன் 2.. முன்பதிவில் கெத்தாக வசூல் வேட்டையைத் தொடங்கிய ஆண்டவர்! படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக படத்தில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் மிகவும் வயது முதிர்ந்த தோற்றத்திற்காக கமல் ஹாசன் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தினமும் ஷாட் முடிந்த பின்னர் அவருக்கு போடப்பட்ட பிராஸ்தட்டிக் மேக்கப்பினைக் கலைக்க மூன்று மணி நேரம் ஆகும் என இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 புரோமோஷனில் பேசினார்.