இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும்!
|
இது ஒரு தமிழர்களின் பிரச்சனையாகப் பாருங்கள், ஒரு தமிழ் இனத்திற்கு நடந்த ஒரு பிரச்சனையாகப் பாருங்கள். எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான் நாங்கள் இந்த போராட்டங்களைச் செய்து வருகின்றோம், தொடர்ந்து வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார். |
|
மட்டு.ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (24) ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்த்pன் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியாகவும் வடக்கு-கிழக்கு இணைந்த உப தலைவியாகவும் இருக்கிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் திகதி வழக்கம்போல சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் பேரணிகளாகச் செய்கின்றோம். இம்முறை அதனை ஒரு மாநாடாகச் செய்வதற்காக வடக்கு-கிழக்கு இணைந்த தாய்மார்களாக நாங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். எதிர்வரும் 30-ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த பேரணியானது ஆரம்பிக்கப்பட இருக்கிறது. காலையில் 9 மணி போல இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா மண்டபத்திற்கு பேரணியாக வந்த பிற்பாடு, இந்த மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல்கள், நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை ஊடக வாயிலாக எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். அந்த மாநாட்டின் நோக்கம், இவ்வளவு காலமும் உலகப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்து, சர்வதேச நீதிப் பொறிமுறையை வேண்டி, பாதிக்கப்பட்ட தரப்பாக நீண்டகாலமாக நாங்கள் சர்வதேச விசாரணையின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து, அதற்கான பொறுப்பானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கான ஒரு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி, 2017-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் கோரி வருகின்றோம். ஆனால், இதுவரைக்கும் எங்களுக்கான எந்தவொரு நீதியும் பெறாத பட்சத்தில், இலங்கை அரசானது அரசுகள் மாறினாலும், தலைவர்கள் மாறினாலும் பல வாக்குறுதிகளை எங்களுக்குச் சொல்லி தலைவர்களாக வந்தாலும், அவர்கள் எங்களுடைய பிரச்சனை என்பதை தொட்டுக் கூட பார்ப்பதில்லை, அதைச் கிடப்பில் போட்டு விடுகிறார்கள்.இலங்கை பொருளாதாரம் எனவே, இந்த அரசும் காணாமல்போனோர் அலுவலகத்தை நாங்கள் நிராகரித்தோம். எங்களுடைய உறவுகளின் சாட்சியங்களை அவர்களுக்குக் கொடுத்தோம், 5 வருஷம் கழிந்த பிறகும் அவர்கள் அந்த சாட்சியங்களைத் தொலைத்து விட்டோம், திரும்பவும் அந்த சாட்சியத்தைத் தாங்க என்று கேட்கிற நிலைதான் இந்த இலங்கை அரசின் ஊடாக கொண்டுவரப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் வேலைத்திட்டமாக உள்ளது. அவர்கள் எங்களுடைய தரவுகளைத் திரட்டுவதும், எமக்கான 2 லட்சம் ரூபாய் காசையும் கொடுத்து, தாய்மார்களுக்காகக் காசையும் கொடுத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களுடைய அன்பான உறவுகளின் நில அறியாது, இழப்பீடாகக் கொடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் இந்த அரசு மாத்திரமல்ல, ஒவ்வொரு அரசின் நோக்கமாகவும் இருக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த மகாநாடு சர்வதேச பிரதிநிதிகளையும் அழைத்து, எங்களுடைய இத்தனை வருட போராட்டங்கள், நாங்கள் வைக்கப்பட்ட கோரிக்கைகள் எல்லாவற்றையும் முன்வைத்து, வருகின்ற சர்வதேச பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் "இந்த உலக பொறிமுறைக்குள்ள போய்ப் பார்க்கலாம்" என்று சொல்கிற சில அமைப்புகளுக்கும் நாங்கள் எடுத்துக் கூறுவதற்காகத்தான் இந்த சர்வதேச மகாநாடாக யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நாங்கள் இந்த சர்வதேச மாநாட்டை கூட்டியுள்ளோம். அதற்கான பெயரிடப்பட்டிருக்கிறது "நீதிக்கான நீள் பயணம்" - என்று சொன்னால் நாங்கள் நீண்டகாலமாக எங்களுக்கு நீதி கேட்டு நீண்டகாலமாக நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு. இந்த நிகழ்ச்சியானது எங்களோடு தேடித் தங்களுடைய அன்பானவர்களைத் தேடி இறந்த தாய்மார்கள் 600-க்கும் மேற்பட்டோர் இதுவரைக்கும் இறந்திருக்கிறார்கள். அவர்களுடைய சாட்சியப் புத்தகமாக, "அளிக்கப்பட்ட சாட்சியங்கள்" எனும் பெயரில் அந்தப் புத்தக வெளியீடும், அந்த குடும்பங்கள் அந்த தாய்மாரை மதிப்பளிக்கும் ஒரு நிகழ்வும் அந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக இருக்கின்றது. அதேபோன்று இவ்வளவு காலமும் நாங்கள் இலங்கை அரசுக்கோ அல்லது சர்வதேசத்துக்கோ நாங்கள் கொடுத்த அறிக்கைகள் அது ஒரு புத்தகமாக்கப்பட்டு அந்த அறிக்கைகளும் வெளியிடப்பட உள்ளது. அதேபோன்று எமது உறவுகள் அன்பானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் அவர்களுடைய பொருட்கள், அவர்கள் பாவித்த உடுப்புகள் அல்லது அவர்கள் பாவித்த பொருட்களை ஒரு காட்சிப்படுத்தலும் அந்த மாநாட்டின் ஒரு அம்சமாக இருக்கின்றது. இதேபோன்று சர்வதேச பிரதிநிதிகளின் உரைகளும் தாய்மாரின் ஒரு கண்ணீர் கதைகளும் ஆன ஒரு மாநாடாகத்தான் இந்த மாநாடு அமைய இருக்கிறது. ஆகவே, பல்வேறுபட்ட விடயங்கள் அந்த மாநாட்டில் எங்களுடைய தாய்மாருடைய காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் வலியை உணர்த்தும் மாநாடாகத்தான் இந்த மாநாடு தந்தை செல்வா அரங்கில் எதிர்வரும் 30-ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆகவே, இதற்கு பல்வேறுபட்ட தரப்புகளும் ஒன்றிணைந்து எங்களோடு கைகோர்த்து, ஒருமித்த குரலோடு சர்வதேசத்திற்கு இது ஒரு நாங்கள் ஒரு முடிந்த முயற்சியில் அதிகபட்ச முயற்சியாக நாங்கள் இதனைப் பார்க்கிறோம். சர்வதேசத்திற்கு எங்களுடைய பிரச்சனைகளைக் கொண்டு செல்லும் ஒரு மாநாடாக நாங்கள் இந்த மாநாட்டைப் பார்க்கிறோம். அதற்காக ஒவ்வொரு தாய்மாரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கான வசதிகள் இல்லை, நிதி வளம் இல்லை. நாங்கள் நிதிக்காகப் போராடின தாய்மார் என்று சொன்னால் நாங்கள் எதுவும் செய்து கொண்டு போகலாம். நாங்கள் நீதிக்காகப் போய் நிற்கிற நேரத்தில் பல தடைகள் வருகிறது, பல பிரச்சனைகள் வருகிறது. ஏன் காணால்போனோர் அலுவலகத்தின் ஊடாகக்கூட எங்களுக்கு நாளைய தினம் இவ்வளவு காலமும் செய்யாத காணாமல்போனோர் அலுவலகம் இந்த காணாமல் போன தினத்திற்கு யாழ்ப்பாணத்தில் ஒரு மாநாடு செய்வதற்கும் தீர்மானித்திருக்கிறார்கள். இதனை நாங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் எமது பெற்றோர் ஊடாகவும் அறியக்கூடியதாக இருக்கிறது. இது இந்த மாநாட்டைக் குழப்பும் முயற்சியாகவும் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். இதேபோன்று அரசு பயங்கரவாதிகளோடு இணைந்து செயல்படுபவர்களும் எங்களுடைய இந்த தாய்மாரின் கண்ணீரான மாநாட்டை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு பல்வேறு பக்கத்தாலும் பல்வேறு பரப்புரைகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, தயவு செய்து இது எல்லோருடைய தாய்மார்களுடைய கூட்டு முயற்சியை, தங்களுக்கொரு நீதி கிடைக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிகிறதுக்கான ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல வருட உழைப்பும், கண்ணீரும், வேர்வையும் இந்த தாய்மாரின் உழைப்பாக இந்த மாநாடு இடம்பெற உள்ளது. |