கொல்லப்பட்ட ஹமாஸ் மூத்த தளபதி

02.01.2025 07:59:51

அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் மூத்த தளபதியை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாய்க்கிழமை ஒரு குறிப்பிட்ட இலக்கு தாக்குதலில் ஹமாஸ் மூத்த தளபதி அப்துல்-ஹாதி சபாஹை(Abd al-Hadi Sabah) அகற்றியதாக(கொல்லப்பட்டதாக) அறிவித்துள்ளது.

ஹமாஸின் மேற்கு கான் யூனிஸ் பட்டாலியனில்(Khan Yunis Battalion) நுக்பா படைப்பிரிவு(Nukhba Platoon) தளபதியாக பணியாற்றிய சபாஹ், கிப்புட்ஸ் நிர் ஓஸ்(Kibbutz Nir Oz) மீதான அக்டோபர் 7 ஆம் திகதி நடந்த கொடூரமான தாக்குதலில் நேரடியாக தொடர்புடையவர் ஆவார்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ்(Khan Yunis) பகுதியில் துல்லியமான தகவலின் அடிப்படையில் IDF மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பு(ISA) இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் X தளப் பதிவில் வெளியிடப்பட்ட IDF அறிக்கையில், ஹமாஸ் மூத்த தளபதி அப்துல்-ஹாதி சபாஹ் கான் யூனிஸில்(Khan Yunis) உள்ள மனிதாபிமான பகுதியில் தங்கியிருந்து செயல்பட்டு வந்த நிலையில் அவரை அகற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் IDF-ன் 162வது "ஸ்டீல்" பிரிவின் கட்டளையின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.