உதய் கேள்விகளுக்கு பதிளிக்கும் CM விஜய்!
|
தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூட உள்ளது. கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பொறுப்பு வைக்கும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு விஜய் இன்று பதிலளிப்பேன் என சொல்லி இருக்கும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரமே அந்த பதிலை தான் எதிர்நோக்கி இருக்கிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
|
|
இதை அடுத்துக் கடந்த 5ஆம் தேதி 2026 2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஐந்தாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து 7 முதல் 11ஆம் தேதி வரை சட்ட சபையில் விவாதம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக்கழகம், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து 12-ஆம் தேதி வேளாண் மற்றும் பொது பட்ஜெட் குறித்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். பொது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் வினோத்தும் பதில் அளித்தனர். இதை அடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தன. துறை ரீதியான மானிய கோரிக்கை வீமீதான விவாதம் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். போதைப் பொருள் விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் பாதுகாப்பு படையில் இருக்கும் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை, ஆணவக் கொலை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததோடு, இது தொடர்பாக முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என பேசினார். அப்போது திமுகவுக்கும் ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய்," இந்த கேள்விகளுக்கெல்லாம் நான் திங்கள்கிழமை பதில் சொல்வேன் அப்போது யாரும் ஓடி விடக்கூடாது" என பேசிவிட்டு அவையை விட்டு வெளியேறினார். அப்போது, "ஓடக்கூடாது என சொல்லிவிட்டு யார் ஓடுகிறார்கள் என பாருங்கள் என பதிலடி கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிலையில் கோகுலாஷ்டமி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்னும் சற்று கூடுகிறது. அவை கூடியதும் முதல்வர் விஜய் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளிக்க உள்ளார். இதில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து விரிவான விளக்கத்தை முதல்வர் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் என சொல்லப்படுகிறது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் விஜயின் பேச்சை கேட்க ஆர்வமாக இருக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். தொடர்ந்து வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் மீதான விவாதம் நடக்கிறது. இதில் அந்த துறை அமைச்சர்களான லோகேஷ் தமிழ்ச்செல்வன், ராஜீவ் ஆகியோர் பதிலளித்து, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள். |