விஜய், புஸ்ஸி ஆனந்த் போட்டியிடும் தொகுதிகள் இதுவா?!

17.03.2026 08:19:03

விஜய் அடிப்படையில் ஒரு நடிகர் என்பதால் அவர் துவங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு இளைஞர்களின் ஆதரவு கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரம் வெற்றிக்குத் தேவையான கூட்டணியை தவெக இதுவரை அமைக்கவில்லை. இத்தனைக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என விஜய் அறிவித்தும் இதுவரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க செல்லவில்லை..
 

ஒருபக்கம் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், தவெக தரப்பும் மறுத்திருக்கிறார்கள். எனவே விஜய் தனித்துப் போட்டுயிடுவது உறுதியாகியிருக்கிறது. ஒருபக்கம் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு விஜயின் ரசிகர்களிடமும் தவெக தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது..

ஏற்கனவே விஜய் இரண்டு தொகுதியில் போட்டுவிட திட்டமிட்டிருக்கிறார் என செய்திகள் வெளியேறும் நிலையில் தற்போது விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என செய்தி வெளியாகியிருக்கிறது. அதேபோல் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறாராம்..