கல்முனை வடக்கில் 08 நபர்களுக்கு கொரோனா
20.08.2021 06:20:17
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமணைக்குட்பட்ட பகுதியில் 08 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிமணை தெரிவித்துள்ளது. எழுமாற்றாக 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கல்முனை வடக்குபிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, துறைவந்தியமேடு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் கொரோனா தொற்றாளர்களை அடையாளங் கண்பதற்கான அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.