மாணவியின் கைப்பேசியை திருடிய நபர் கைது

30.09.2021 13:45:47

சியம்பலாண்டுவ, தொம்பகஹவெல பிரதேசத்தில், திடீரெனச் சுகவீனமடைந்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு உதவும் போர்வையில் அவரின் கைப்பேசியைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொம்பகஹாவெல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றுக்குத் தனது தந்தையுடன் சென்றிருந்த வேளையில் குறித்த மாணவி மயக்கமடைந்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் உதவிக்கு வந்த நபரொருவர், மிகவும் நுட்பமான முறையில் மாணவியின் கைப்பேசியைத் திருடியுள்ளார்.

பரீட்சைகளுக்குத் தேவையான அனைத்து குறிப்புகளும் குறித்த கைப்பேசியில் இருந்துள்ளதுடன், அது காணாமல் போனதால் அம்மாணவி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மொனராகலை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து கைப்பேசியும் மீட்கப்பட்டது.