பிஸியாகும் சூர்யா!
சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகள், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் ஒரு சில வாரங்களில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் அடுத்தப் படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் செய்தி கடந்த சில தினங்களாக வைரலாகப் பரவி வரும் நிலையில் இந்த படம் பற்றி மேலதிக விவரங்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி விஜய்க்காக ஒரு கதையை உருவாக்கி அவரிடம் சொல்லியிருந்தார். ஆனால் அந்த கதை அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அதே கதையைதான் மாற்றி இப்போது சூர்யாவை வைத்து இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைக்க ஏஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் டிசம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.