மும்பை சென்னையை வீழ்த்தியது !
02.05.2021 11:07:52
ஐ.பி.எல் தொடரின் 27 வது போட்டியில் மும்பை இந்தியன் அணி 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 219 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்களை பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.