தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்

21.07.2022 12:00:00

முக்கிய சந்திப்பு

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம்(21) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருவருக்கும் இடையில் நட்பு ரீதியாகவும் நேர்மையாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காது தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற குழுக்கள் முறைமையினை பலப்படுத்துவதற்கு இதன்போது முன்மொழியப்பட்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியலில் திடீர் திருப்பம்

20 வருடங்களுக்கு மேலாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றாக பயணித்த சஜித் 2019 தேர்தலையொட்டி ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகியிருந்தார்.

இதனையடுத்து 2019ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சிறிலங்கா அதிபருக்கான தேர்தலில் போட்டியிட்டார், ஐக்கிய தேசிய கட்சியில் விலக்கியதையடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இருவரும் சந்தித்துக்கொண்டது தென்னிலங்கை அரசியலை பொறுத்த வரை பாரிய திருப்புமுனையாகவே அடிக்கோடிடப்படுகின்றது.