அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்- இலங்கைக்கு அச்சுறுத்தல்!
|
இலங்கை பாதுகாப்பு பிரிவு மற்றும் அமெரிக்காவின் மொன்டானா பிராந்தியத்தின் பாதுகாப்பு பிரிவினருடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை என்னி ஜுலி சங் மகிழ்ச்சியில் உள்ளார், என்பதை அறிந்ததும் எமது நாட்டை எண்ணி அஞ்ச வேண்டியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற அமைச்சரும் பிவிதுருஹெல உறுமய கட்சியி்ன் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
|
|
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நவம்பர் 14 ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தின் பிராந்திய இராஜதந்திர தொடர்புகளுக்கமைய இடம்பெற்ற நிகழ்வொன்றில், இலங்கை பாதுகாப்பு பிரிவு மற்றும் அமெரிக்காவின் மொன்டானா பிராந்தியத்தின் பாதுகாப்பு பிரிவினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜீலி சங், இலங்கை மற்றும் அமெரிக்கவுக்கிடையிலான தொடர்பின் புதிய அத்தியாயம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பமாகியுள்ளது என தெரிவித்துள்ளார். அத்தோடு அமெரிக்காவின் பிரபலமான இந்து- பசுபிக் மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்த ஒப்பந்தத்தை அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையை எப்போதும் குறை கூறும் ஜுலி சங் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார், என்பதை அறிந்ததும் எமது நாட்டை எண்ணி அஞ்ச வேண்டியுள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களைப் போலவே தற்போது அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை. அதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பிலும் எமக்கு தெரியாது. தகவல்களை வெளிப்படுத்தாமையால் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. மீள எரிய முடியாத ஒன்றை கையகப்படுத்த வேண்டாம் என்னும் கூற்று பலம் பொருந்திய நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கு பொருந்தும். அவ்வாறான நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் இருந்து நாம் விலக முடியாது. ஆகையால் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு முன்னர் அவதானத்துடன் செயற்படுவது மிக அவசியம். வரலாற்றை மீட்டுப்பாக்கும் போது இராணுவ பூமியில் நாட்டை பாதுகாத்த ஆட்சியாளர்கள், ஒப்பந்தங்களில் நாட்டை கோட்டை விட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பில் அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதில்லை. தமது அரசாங்கத்தால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அம்மக்கள் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர். எனினும் துரதிஷ்டவசமாக எமது அரசாங்கத்தின் மீது இலங்கை மக்களுக்கு நம்பிக்கையில்லை. இந்நாட்டில் மன்னராட்சி இடம்பெற்ற காலமுதல் ஏனைய நாடுகளுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் நாட்டு தீங்கினை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளனர் என்றார். |