இந்த மாதம் வெளியாகவுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

04.11.2022 11:03:42

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சையானது 2022  ஆம் ஆண்டு பெப்ரவரி 21 முதல் மார்ச் 3 வரை இடம்பெற்றது.

இந்தப் பரீட்சைக்கு 517,496 மாணவர்கள் தோற்றியிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 2022ஆம் ஆண்டுக்காக பரீட்சை

இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்காக சாதாரண தரப்பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.