வருத்தம் தெரிவிக்கலாமே - சேரன்

20.11.2021 11:44:20

சூர்யா நடித்து, தயாரித்துள்ள நவ., 2ல் ஓடிடியில் வெளியான ஜெயம் பீம் படத்திற்கு பாராட்டுகள் கிடைத்தாலும் மற்றொருபுறம் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இப்படத்திற்கு எதிராக பா.ம.க., கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகரும், இயக்குனருமான சேரன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: படம் உருவாக்கத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் உருவாகவில்லை. போலீஸ் அதிகாரியின் பெயர் மாற்றப்பட்டதும், முக்கிய கதாபாத்திரங்களின் உண்மை பெயர் அப்படியே இருப்பதுமே எந்த பதிலும் சொல்ல முடியாமல் நாம் நிற்க காரணம். அதற்கான பதிலை சொல்லிவிட்டு வருத்தம் தெரிவித்தால் தீர்ந்து விடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.