பயணிகள் அவசரமாக தரையிறக்கம்!

17.06.2025 08:32:45

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட நிறுத்தத்தின் போது, ​​அதன் இயந்திரங்களில் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

AI180 விமானம் அதிகாலை 12.45 மணிக்கு சரியான நேரத்தில் தரையிறங்கியது.

ஆனால் இடது எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதிகாலை 5.20 மணியளவில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் இறங்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விமானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமானத்தின் கேப்டன் பயணிகளிடம் தெரிவித்தார்.

 

திங்கட்கிழமை முன்னதாக, மும்பையிலிருந்து அகமதாபாத்திற்குச் செல்லும் ஏர் இந்தியாவின் AI2493 விமானம் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக தாமதங்களை சந்தித்த பின்னர் இரத்து செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் ANI வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தை இயக்க நியமிக்கப்பட்ட ஏர்பஸ் A321-211 (VT-PPL), ஆரம்பத்தில் குறிப்பிடப்படாத காரணங்களுக்காக தாமதமானது.

இதற்கிடையில், டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தலைநகருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.