நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தெளிவூட்டல் செயலமர்வு

27.02.2024 08:20:15

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் சிரேஷ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனனியால் இணையவழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டன. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மாவட்ட ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக ஊடகப்பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.