மெக்சிகோவில் இரசாயனக் கிடங்கில் பயங்கரத் தீ.

24.10.2026 10:35:43

மெக்சிகோவின் குவானாஜுவாட்டோ மாநிலத்தில் உள்ள லியோன் நகரின் சான் நிக்கோலஸ் பகுதியில் அமைந்துள்ள இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் தொடர் வெடிப்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நேற்றைய தினம் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில், குறைந்தது ஒருவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

கிடங்கில் ஏற்பட்ட தீ காரணமாகப் பெரும் தீப்பிழம்புகளும் அடர்த்தியான கரும்புகையும் எழுந்துள்ளன. மேலும், அங்கு அடுத்தடுத்து வெடிப்புகள் ஏற்பட்டதால், அருகிலிருந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். 

 

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புப் படையினர், சிவில் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சில வீதிகளிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் என்ன, கிடங்கில் எத்தகைய இரசாயனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.