விரும்பினால் சுதந்திரக் கட்சி வெளியேறலாம் – நாமல்

13.01.2022 05:16:45

அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களைத் தவறாகப் பேசினால், அவர்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் அவர்கள் இல்லாமல் அரசாங்கம் தனது பயணத்தைத் தொடரும் எனவும்  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்குள் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவுகளை ஊடகங்கள் மூலம் தவறாக பேசிவருகின்றனர் முதுகுக்குப் பின்னால் பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடலாம் .

இப்போது உயர்த்தப்பட வேண்டியது கோட்டாபய ராஜபக்ஷவோ, மைத்திரிபால சிறிசேனவோ அல்லது நானோ அல்ல, தேசத்தின் மக்களே, என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.