தமிழரசின் வேட்பாளர் அஞ்சல் மூலம் வாக்களித்தார்!

09.11.2024 09:28:14

திர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ள பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் வெள்ளிக்கிழமை தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்டார். 2024 பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தபோது அரசாங்க உத்தியோகத்தரான அ.கருணாகரன் அதற்கு விண்ணப்பித்திருந்தார்.

  

இருப்பினும் இறுதி கட்டத்தில் கருணாகரன், தமிழரசு கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.

தபால் மூல வாக்களிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு அதன் பின்பு தேர்தல் திணைக்களத்தினால் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி தினத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் (வெள்ளிக்கிழமை) தபால் மூல வாக்கினை மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார்.

      Bookmark and Share Seithy.com