பொருளாதார மத்திய நிலையங்களில் நுகர்வோர் அதிகரிப்பு!

02.10.2021 06:57:02

நாடு மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் மரக்கறி மற்றும் பழங்களின் விலைகள் சாதாரண அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினத்தைப் போன்றும் இன்றைய தினமும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமையாளர் ஆர். என். பண்டார குறிப்பிட்டார்.