விவசாயிகளின் டிராக்டர் பேரணி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களின் டிராக்டர் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நாளை 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அனைத்து எல்லைகளிலும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர்.
கிழக்கு, மேற்கு டெல்லி உள்பட டெல்லியின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியாணாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள பாரதிய கிஸான் யூனியன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகத் கூறுகையில், ‘ஜனவரி 26-ஆம் திகதி குடியரசு தினவிழாவில் நடைபெறும் டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணி நடைபெறுகிறது. நாளை மத்திய அரசுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.