10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் முடக்கம்!
|
இலங்கையில் பிளாஸ்டிக் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 10 இலட்சம் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017ஆம் ஆண்டு பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்திச் செலவைக் குறைப்பது உள்ளிட்ட நோக்கங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அட்டையில், 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள எண் இடம்பெற்றுள்ளது. எனினும், தற்போது பிளாஸ்டிக் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளை அச்சிடும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. இதனால், புதிதாக அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அவற்றை உரிய நேரத்தில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகள், தனிநபர் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் பல்வேறு அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அத்தியாவசியமானவை. இந்நிலையில், சுமார் 10 இலட்சம் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அவற்றை உரிய காலத்தில் வழங்குவது தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. |