இங்கிலாந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி !

01.11.2021 13:33:54

உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய சார்பாக அணித்தலைவர் ஆரோன் பின்ச் 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 126 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி குழு ஒன்றில் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.