நடிகை மமிதா பைஜு குரேஷி சந்திப்பு.

29.09.2026 14:39:22

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மமிதா பைஜுவை, சின்னத்திரை மற்றும் விஜய் டிவி பிரபலம் குரேஷி சமீபத்தில் சந்தினுள்ளார். இவர்களது இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் அறிமுகமாகி தற்சமயம் தமிழிலும் 'டியூட்', 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்', 'ஜனநாயகன்' போன்ற தொடர் வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை மமிதா பைஜு. விஜய் டிவி 'கலக்கப்போவது யாரு' மற்றும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் குரேஷி, ஒரு விளம்பரப் படப்பிடிப்பின் முன்னோட்ட நிகழ்வுக்காக மமிதா பைஜுவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குரேஷி, "திறமைகளின் ஒட்டுமொத்த உருவத்துடன் இருக்கிறேன்; எனக்கு மிகவும் பிடித்த நடிகை மமிதா பைஜுவுடனான இனிய நினைவுகள்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையை நோக்கி பயணிக்கும் குரேஷியின் இந்த வளர்ச்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.