மீனுக்கு மனிதர்களை போல் பற்கள்: வைரலாகும் புகைப்படம்

07.08.2021 15:12:25

வடக்கு கரோலினாவில் மீனவர்களின் வலையில் மனிதர்களை போல் பற்களை கொண்ட மீன் ஒன்று பிடிபட்டு உள்ளது.


வடக்கு கரோலினா மீனவர்கள் தெரிவித்து உள்ளதாவது:மனிதர்களைப் போல் பற்களை கொண்ட இந்த வகை தடித்த மீன்கள், வடக்கு மற்றும் தெற்கு கரோனாலினா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியில் இருக்கின்றன. ஆனால் இவற்றை அரிதாகவே காண முடியும். இந்த வகை மீன்கள் சுமார் 1 முதல் 1.5 அடி நீளம் வளரக் கூடியது. இவை நன்கு சண்டையிடும். இவற்றின் சுவையும் நன்றாக இருக்கும்.


இந்த வகை மீன்கள் ஆங்கிலத்தில் ஷிப்ஷிட் மீன்கள் என, அழைக்கப்படுகின்றன. இவற்றின் பற்களும் தாடை அமைப்பும் ஆட்டின் தாடை பற்களையும் ஒத்திருப்பதால் இந்த மீன்களை ஷிப்ஷிட் மீன்கள் என்கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மீனின் படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.