கர்ப்பிணித் தாய்மார்கள் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்தக்கூடாது

10.09.2021 08:53:36

ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, ஏனைய அனைத்து விதமான தடுப்பூசிகளையும் கர்ப்பணித் தாய்மாருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கர்ப்பணித் தாய்மார்கள் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எந்தவொரு கர்ப்பணித் தாய்க்கும், வேறு நோய்கள் ஏற்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பின்னர், குழந்தை பிரசுவித்த தாய்மாரும் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

அவ்வாறு பிறந்த எந்தவொரு குழந்தைக்கும், வேறு எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, ஏனைய அனைத்து தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்