கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது - முதலமைச்சர் பழனிசாமி

03.01.2021 10:04:23

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருங்கள். நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மக்கள் அளிப்பார்கள். 

அதிமுகவை உடைத்து இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீயநோக்கத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.  இந்த ஆட்சி மக்களாட்சி, இதை மக்கள்தான் ஆள்கின்றனர். திமுகவின் வாரிசு அரசியல் மக்கள் மத்தியில் எடுபடாது.