இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வலுக்கும் முரண்பாடு!

16.12.2025 14:42:49

தொழிலாளர் உரிமைகள் மசோதா குறித்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கருத்து முரண்பாடுகள் வலுப்பெறுகின்றன.

 

குறிப்பாக (Angela Rayner) ஆஞ்சலோ ரேனர் இந்த சட்டத்தை நிறைவேற்ற இரவிலும் அமரும்படி பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறார்.

இதேவேளை, குறித்த மசோதா மரபுரிமைப் பிரபுக்களால் (hereditary peers) தாமதப்படுத்தப்படுகிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் தாமதம் தொழிலாளர்களின் நோய் விடுப்பு போன்ற முக்கிய பலன்களை பாதிக்கும் என்று ரேனர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபுக்கள் சபையும் பொதுமக்கள் சபையும் மாறி மாறி மசோதாவில் திருத்தங்களை அனுப்பும் “பிங் பாங்” செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று ரேனர் மற்றும் அமைச்சர் (Kate Dearden ) கேட் டீர்டன் இருவரும் கோரியுள்ளனர்..

 

இந்த விவாதத்தின் விளைவாக, அநியாய பணி நீக்கத்திற்கான இழப்பீட்டு உச்சவரம்பை (compensation cap) நீக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றி பெற்றது.

இது வணிகக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் இந்த மசோதா சட்டமாக வேண்டும் என்ற பொதுவான விருப்பத்தை அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.