மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை

16.01.2022 05:35:30

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்டு சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த பின்னணியில் செயற்படுபவர்கள் தொடர்பாக தமக்குத் தெரியும் என்றும் சரியான நேரத்தில் விவரம் வெளியிடப்படும் என்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்தை விமர்சித்துவருவதனால் அவரைச் சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள மைத்திரிபால சிறிசேனவும் அவர் தலைமையிலான கட்சியும் தயாராக இருப்பதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தவறை சுட்டிக்காட்ட அனுமதி வழங்கியுள்ள சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்