ரஷ்யாவில் கோர விபத்து.

22.07.2025 08:09:34

ரஷ்யாவின் கிழக்கே, யகுதியா பகுதியில் நேற்றைய தினம்  சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து 82 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13  பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 20  பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் நிலக்கரி  பதப்படுத்தும் தொழிற்சாலை  அமைந்த விதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவில் இதுபோன்ற தொழிற்சாலை சார்ந்த விபத்துகள் நடைபெறுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த  விபத்து சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.