இலங்கை முதல்நாள் முடிவில் 315-6
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நேற்றைய முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களுடனும் துனித் வெல்லாலகே 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
காலி சர்வதேச மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டத்தை இலங்கை அணி இன்று தொடரவுள்ளது.